ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் இன்று (நவ.03) தீவிரவாதிகள் சிலர் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் 11 பேர் படுகாயமடைந்தனர்.
ஸ்ரீநகரில் உள்ள சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு மையம் (டிஆர்சி) அருகே இன்று காலை இந்த தாக்குதல் நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பதுங்குக் குழியை நோக்கி குண்டு வீசப்பட்டதாகவும் எனினும் தீவிரவாதிகள் வைத்த குறி தவறி பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சண்டே மார்க்கெட் பகுதியில் அந்த கையெறி குண்டு விழுந்து வெடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து உடனடியாக இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
சண்டே மார்க்கெட் பகுதி தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மிகவும் பரபரப்பான பகுதியாகும். இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, அங்குள்ள கடைகளை மூடப்பட்டு அப்பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.
» கேரள ரயில் விபத்தில் இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
» மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை: பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்வு
இந்த தாக்குதலுக்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். “கடந்த சில நாட்களாக காஷ்மீரில் சில பகுதிகளில் தாக்குதல்கள் மற்றும் என்கவுன்டர் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஸ்ரீநகரில் உள்ள சண்டே மார்க்கெட்டில், கடைகளுக்கு வந்த அப்பாவி மக்கள் மீது கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது. அப்பாவி பொதுமக்களை குறிவைப்பதை நியாயப்படுத்த முடியாது” என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம், ஷாங்குஸ்-லார்னூ பகுதியில் நேற்று 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இன்று தாக்குதல் நடந்துள்ளது. நேற்றைய சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
நேற்று கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் எனவும் மற்றொருவர் உள்ளூர் நபர் எனவும் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் எந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் நேற்று முன்தினம் மற்றொரு மோதல் சம்பவம் நடைபெற்றது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
கடந்த மாத தொடக்கத்தில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதில் இருந்து, ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago