இந்தியாவின் ஒருங்கிணைந்த நோய்த் தடுப்பு திட்டத்தின் (UIP) முக்கிய நோக்கம், நோய்களில் இருந்து உயிர்களைப் பாதுகாப்பதாகும். ஒவ்வொரு ஆண்டும், தட்டம்மை, தொண்டை அடைப்பான், போலியோ போன்ற12 தடுக்கக் கூடிய நோய்களுக்கு எதிராக 2.6 கோடிக்கும் அதிகமான பச்சிளம் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த நோய்த் தடுப்புத் திட்டத்தின் (Universal Immunization Programme -UIP-யுஐபி) கீழ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
இந்தத் திட்டம் 1985-ம் ஆண்டில் தொடங் கப்பட்டாலும், கடந்த 10 ஆண்டுகளில் இது மிக வேகமாக விரிவடைந்துள்ளது. ‘இந்திர தனுஷ் இயக்கம்’ போன்ற தீவிர இயக்கங்கள், தடுப்பூசிப் பாதுகாப்பை 90 சதவீதத்திற்கும் மேலாக கணிசமாக அதிகரித்துள்ளன. 100 சதவீதம் அளவுக்குத் தடுப்பூசி மூலமான பாதுகாப்பை எட்டுவதில் இன்னும் சவால்கள் உள்ளன. சில பிராந்தியங்கள் மற்றும் சமூகங் களில் தடுப்பூசி தொடர்பான தயக்கம் நிலவுகிறது. அத்துடன் சிலர் அடிக்கடி இடம்பெயர் வதால் முறையாக தடுப்பூசிகளைச் செலுத்த முடிவதில்லை. முழுமையாக தடுப்பூசி போடா மல் இருப்பதற்கும் தடுப்பூசியே செலுத்திக் கொள்ளாமல் இருப்பதற்கும் பல காரணிகள் உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்குத் தலைமையின் கீழ், மத்திய அரசு,பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரத் துக்கும் ஊட்டச்சத்துக்கும் உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. அத்துடன் எந்தவொரு குழந்தையும் கர்ப்பிணிப் பெண்ணும் உரிய தடுப்பூசிகளில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது என்ற குறிக்கோளில் அரசு உறுதியாக உள்ளது. இந்த இலக்கை அடைய, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ‘யு-வின்’ (யுனிவர்சல் இம்யூனைசேஷன் புரோகிராம் - U-WIN) வடிவத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிக்க ஒரு தொழில்நுட்ப தீர்வைக் கொண்டு வந்துள்ளது.
‘யு-வின்’ என்பது ஒரு டிஜிட்டல் தளம். இது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் தடுப்பூசி நிலையை மின்னணு முறையில் பதிவு செய்து கண்காணிக்கிறது. ‘யு-வின்’ என்பது அடிப்படையில் தடுப்பூசி தொடர்பான பதிவேடு ஆகும். இது எங்கிருந்தும் அணுகி,எந்த நேரத்திலும் தடுப்பூசி போட உதவுகிறது. மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் வடிவமைக்கப்பட்ட இந்தத்தளம், தடுப்பூசி நடைமுறைகளை எளிதாக்கப் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள்‘யு-வின்’(U-WIN) செயலி அல்லது தளம் மூலம் சுயமாக பதிவு செய்து கொள்ளலாம். அல்லது அருகிலுள்ள தடுப்பூசி மையத்திற்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்தவுடன், சுகாதாரப் பணியாளர்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கான முக்கியமானதடுப்பூசிகளின் கால அளவு உள்ளிட்டவற்றைக்கண்காணிக்க முடியும். பிரசவத்திற்குப் பிந்தைய நிலைகளைப் பதிவு செய்யலாம். புதிதாகப் பிறந்த குழந்தையின் தடுப்பூசி விவரங்களைப் பதிவு செய்து அவர்களுக்குச் செலுத்த வேண்டிய தடுப்பூசி அட்டவணையைப் பராமரித்து, முறையாகத் தடுப்பூசி நடைமுறைகளைத் தொடங்கலாம். குழந்தைகளுக்கு 16 வயதாகும் வரை இந்த அட்டவணையைத் திட்ட மேலாளர்கள் கண்காணிக்க முடியும்.
‘யு-வின்’ தளம் பெற்றோருக்குக் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகிறது. இது நாட்டில்எந்த இடத்திலும் தடுப்பூசி சேவைகளைப் பெறவும், இணைய தளத்தில் சில கிளிக்குகளைச் செய்துதங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இந்தத் தளம் ஒருமுன்பதிவு அம்சத்தை யும் வழங்குகிறது. இது இடம்பெயர்ந்த தொழிலாளர் களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ‘யு-வின்’ (U-WIN) தளம், 11 மொழிகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதன் முக்கிய அம்சம், பதிவுகளின் டிஜிட்டல்மயமாக்கல் ஆகும். ஒவ்வொரு முறையும் சரிபார்க்கப்பட்ட பயனாளி தடுப்பூசியைப் பெறும் போது, உடனடியாக டிஜிட்டல் தடுப்பூசி பதிவு உருவாக்கப்படுகிறது. பயனாளிகள் டிஜிட்டல் ஒப்புகை மற்றும் க்யூஆர் குறியீடுஅடிப்படையிலான சான்றிதழைப் பெறுகிறார்கள். இதனை சரிபார்ப்புக்காக மொபைல் சாதனங்களில் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்த நடைமுறை, குறிப்பாகப் பள்ளிச் சேர்க்கை மற்றும் பயணங்களின்போது பயனுள்ளதாக இருக்கும்.
இது தவிர, அடுத்து செலுத்தப்பட வேண்டிய தடுப்பூசிகள் தொடர்பான எஸ்எம்எஸ் அறிவிப்புகளையும் நினைவூட்டல்களையும் இந்தத் தளம் அனுப்புகிறது. பெற்றோரும் சுகாதாரப் பணியாளர்களும், தடுப்பூசிகள் செலுத்துவது தொடர்பானபரிந்துரைக்கப்பட்ட இடைவெளியை முறையாகக் கடைபிடித்து அதன் பின்னர் தாமதமின்றி உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்கிறது.
‘யு-வின்’ ஒரு ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறது. பெற்றோர், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரையும் ஒன்றிணைக்கிறது. இது குழந்தைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு (ABHA) அடையாள எண்ணை (ஐடி-ID) உருவாக்க உதவுகிறது. இது மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பிற சேவை வழங்குநர்களுடன் சுகாதார பதிவுகளை தனிநபர்களின் ஒப்புதலுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், சுகாதாரப் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்த இந்தியா, உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட சுகாதாரத் தீர்வுகளை நம்பியுள்ளது. 2014-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு தடுப்பூசி நுண்ணறிவுக் கட்டமைப்பு (eVIN), தடுப்பூசிகளின் சேமிப்பு மற்றும் கடைசி நிலை வரையிலான விநியோகத்தை நல்ல முறையில் மாற்றி அமைத்துள்ளது.
கோவிட்-19 தொற்றின்போது, இந்தியாவின் தடுப்பூசித் திட்டத்தின் தொழில்நுட்ப முதுகெலும்பாக ‘கோ-வின்’ தளம் செயல்பட்டது. அதன் வெற்றியை உலகம் கண்கூடாக கண்டது, இது 18 மாதங்களுக்கும் குறைவான காலத்தில் 220 கோடி கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் தொடர்பான தகவல்களை நிர்வகிக்க உதவியுள்ளது. இப்போது ‘யு-வின்’ தடுப்பூசி செலுத்துதலைக் கணிசமாக மேம்படுத்தும். அதன் மூலம் நாட்டில் பல்வேறு நோய்த் தடுப்பு சேவைகளின் சூழல் சிறப்பாக மாற உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பனி படர்ந்த நிலப்பரப்புகள், கட்ச் பாலைவனங்கள், அருணாச்சல பிரதேசத்தின் எல்லைகள், அந்தமான் - நிக்கோபார் தீவு களின் நீரால் சூழப்பட்ட கிராமங்கள் என எங்கு வாழ்ந்தாலும், நாட்டின் எந்தவொரு குழந்தையும் உயிர்காக்கும் தடுப்பூசிகளில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்ற உறுதியான தீர்மானத்தை, மத்திய அரசின் முயற்சிகள் பிரதிபலிக்கின்றன.
கட்டுரையாளர்: ஜகத் பிரகாஷ் நட்டா, மத்திய சுகாதாரம், குடும்ப நலம், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago