அன்மோல் பிஷ்னோயை இந்தியா அழைத்து வர வேண்டும்: மத்திய அரசிடம் மும்பை போலீஸ் கோரிக்கை

By செய்திப்பிரிவு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு, முன்னாள் எம்எல்ஏ பாபா சித்திக் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவர மும்பை போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான்கானின் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் 14-ம் தேதி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இது தொடர்பாக விக்கி குப்தா, சாகர் பால், அனுஜ்குமார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அனுஜ்குமார் போலீஸ் காவலில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் ரவுடி லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் அவரது சகோதரர்கள் அன்மல் பிஷ்னாய் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அன்மோல் பிஷ்னோய் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்எல்ஏ.,வுமான பாபா சித்திக்கை, கடந்த மாதம் 12-ம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் சுட்டுக்கொன்றது. இது தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் குஜராத் சமர்பதி சிறையில் இருக்கும் பஞ்சாப் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய், அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் இருப்பதாக மும்பை போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் டெல்லி உட்பட நாட்டின் பல நகரங்களில் நடைபெற்ற கொடிய குற்றங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளது. அன்மோல் பிஷ்னோயை கைது செய்ய உதவினால் ரூ. 10 லட்சம் பரிசு என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் இருப்பதாக மும்பை போலீஸாருக்கு அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பல்வேறு கொடிய வழக்குகளில் தொடர்புடைய அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வர மும்பை போலீஸார் முடிவு செய்தனர். இதற்கான அனுமதி உள்ளூர் நீதிமன்றத்தில் பெறப்பட்டது.

இதையடுத்து அன்மோல் பிஷ்னோயை இந்தியா அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மும்பை போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் என மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்