ஃபரூக் அப்துல்லா கூறியதை உள்துறை அமைச்சகம் கவனத்தில் கொள்ள வேண்டும்: சரத் பவார்

By செய்திப்பிரிவு

மும்பை: புட்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறியதை மத்திய உள்துறை அமைச்சகம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் (எஸ்சிபி) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் பாரமதியில் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், "ஜம்மு காஷ்மீரின் மிகப் பெரிய தலைவர் ஃபரூக் அப்துல்லா. ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர். அவரது நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவரைப் போன்ற ஒருவர் கூறுவது எதுவாக இருந்தாலும் அதை மத்திய அரசு குறிப்பாக உள்துறை அமைச்சகம் கவனத்தில் கொண்டு பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை ஸ்ரீநகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஃபரூக் அப்துல்லா, "புட்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை உயிரோடு பிடிக்க வேண்டும். அவர்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். ஒமர் அப்துல்லா அரசை வீழ்த்த சதி நடக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

புட்காம் மாவட்டத்தின் மகம் பகுதியில் வெளியூரைச் சேர்ந்த இருவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உடல்நிலை சார்ந்த ஆபத்து ஏதும் இல்லை என்றும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் கான்யாரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று (சனிக்கிழமை) துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். "கான்யார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், தங்கள் மீதான தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது. துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏன்றாலும் இரு தரப்பு பகுதிகளிலும் உயிர்ச் தேசம் குறித்து எந்த வித தகவலும் இல்லை” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்