ஹைதராபாத்: மக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் புனிதமாகக் கருதுவதாக பிரதமர் மோடிக்கு அளித்துள்ள பதிலில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தெலங்கானா மாநிலம் குறித்தும், தெலங்கானாவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு குறித்தும் பல்வேறு தவறான கருத்துகள் உங்கள் அறிக்கையில் இருந்ததை பார்க்க முடிந்தது. இவ்விஷயத்தில் தெளிவுபடுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தெலங்கானாவில் டிசம்பர் 7, 2023 இல் காங்கிரஸ் அரசாங்கம் பதவியேற்றது. 10 ஆண்டு கால பாரத் ராஷ்ட்ர சமிதியின் தவறான ஆட்சிக்குப் பிறகு காங்கிரஸ் பொறுப்பேற்றதில் மாநிலம் முழுவதும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் அலை வீசத் தொடங்கியது.
பொறுப்பேற்ற இரண்டு நாட்களுக்குள் தெலங்கானா அரசு தனது முதல் மற்றும் இரண்டாவது வாக்குறுதிகளை நிறைவேற்றியது. தெலங்கானாவின் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ராஜீவ் ஆரோக்கியஸ்ரீ திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு ஆகிய இரண்டு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.
கடந்த 11 மாதங்களில் தெலங்கானாவைச் சேர்ந்த சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் ஒரு ரூபாய் கூட கட்டணம் செலுத்தாமல் மாநிலம் முழுவதும் 101 கோடி இலவச பேருந்து பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம், அவர்கள் ஒரு வருடத்திற்குள் ரூ.3,433.36 கோடியை மிச்சப்படுத்தியுள்ளனர்.
» இருதரப்பு உறவை வலுப்படுத்த கிரீஸ் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
» அத்தியாவசிய மருந்துகளின் விலையேற்றம் குறித்து பிரதமருக்கு காங்., எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம்
ஆட்சிக்கு வந்து ஓராண்டை முடிப்பதற்கு முன்பே, மாநில அளவிலான விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். ரூ. 2,00,000 வரையிலான அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 22 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்போது எந்தக் கடனும் இல்லாமல், ராஜாவைப் போல வாழ்கிறார்கள். 25 நாட்களில் விவசாயிகளின் கணக்கில் 18,000 கோடி ரூபாய் செலுத்தியுள்ளோம். 200 யூனிட்கள் வரை வீடுகளுக்கு மின் கட்டணம் இல்லாமல் இலவச மின்சாரம் கிடைப்பதால் பெண்கள் எங்களை ஆசிர்வதிக்கிறார்கள்.
பாஜக ஆளும் மாநிலங்களில் காஸ் சிலிண்டர்களின் விலை உயர்வால் அவதிப்படும் நிலையில், காங்கிரஸ் ஆளும் தெலங்கானாவில் ஒரு சிலிண்டர் ரூ.500க்கு மட்டுமே கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எங்கள் ஆட்சிக் காலத்தில் இதுவரை 1.31 கோடி எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தினமும் 42,90,246 பயனாளிகளின் முகம்களில் புன்னகையை ஏற்படுத்தியுள்ளோம்.
அரசுப் பணிகளில் இளைஞர்களை சேர்ப்பதற்கான மிகப் பெரிய எண்ணிக்கையிலான ஆட்சேர்ப்பு இயக்கத்தை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது. குரூப் 1, 2, 3 மற்றும் 4 தேர்வுகளை எங்கள் அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. 11 மாதங்களுக்கும் குறைவான காலத்தில், காங்கிரஸ் தகுதியுள்ள 50,000 இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ளது. இது எந்த பாஜக மாநில அரசாங்கமும் செய்யாத சாதனையாகும்.
கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்ட முசி நதியை சுத்தப்படுத்தி புதுப்பித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் ஆக்கிரமிப்பு மற்றும் தேவையற்ற வகையில் அழிக்கப்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற நீர்நிலைகளை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரு அங்குல ஏரி கூட ஆக்கிரமிக்கப்படவில்லை. மேலும், நாங்கள் எதிர்கால நகரத்தை உருவாக்கி வருகிறோம். இதற்காக ஒரு மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டு வருகிறது.
இளம் இந்திய திறன் பல்கலைக்கழகம், ஒய்ஐ விளையாட்டு பல்கலைக்கழகம், ஒய்ஐ ஒருங்கிணைந்த ரெசிடென்ஷியல் பள்ளிகள் ஆகியவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் புனிதமாகக் கருதுகிறோம்.
பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சியின் கீழ் இருந்த இருள் மற்றும் விரக்தி சூழலை மாற்றியுள்ளோம். இருளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். காலை சூரியனைப் போல தெலங்கானா இப்போது பிரகாசித்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தேர்தல் வெற்றிக்காக உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது. அவற்றை நிறைவேற்ற முடியாததால் இப்போது மக்கள் முன் மோசமாக அம்பலமாகி நிற்கிறது. காங்கிரஸின் போலி வாக்குறுதி கலாச்சாரத்துக்கு எதிராக நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஹரியானா மக்கள் காங்கிரசின் பொய்களை நிராகரித்து, நிலையான, முன்னேற்றம் சார்ந்த மற்றும் செயல் ஊக்கம் மிக்க அரசாங்கத்தை எப்படி விரும்பினார்கள் என்பதை சமீபத்தில் பார்த்தோம். காங்கிரஸுக்கு அளிக்கும் வாக்கு என்பது திறமையற்ற நிர்வாகம், மோசமான பொருளாதாரம், மிக மோசமான கொள்ளை ஆகியவற்றுக்கான வாக்கு என்பதை நாடு மிக அதிக அளவில் உணர்ந்து வருகிறது. இந்திய மக்கள் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் விரும்புகிறார்கள். கடந்த காலத்தில் இருந்த அதே நிலையை அல்ல.
கர்நாடகாவில் ஆளும் கட்சிக்குள் அரசியல் போட்டி தீவிரமடைந்து உள்ளது. அதோடு, வளர்ச்சியைப் பற்றி அக்கறை காட்டாமல் கொள்ளையடிப்பதிலேயே காங்கிரஸ் குறியாக இருக்கிறது. அதோடு, தற்போதுள்ள திட்டங்களையும் திரும்பப் பெறப் போகிறார்கள். இமாச்சல பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. தெலங்கானாவில் விவசாயிகள் தங்களுக்கு உறுதியளித்த கடன் தள்ளுபடிக்காக காத்திருக்கின்றனர்" என பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். பிரதமரின் இந்த விமர்சனத்துக்கு தெலங்கானா முதல்வர் தற்போது பதில் அளித்துள்ளார்
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
15 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago