புதுடெல்லி: தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான மல்லிகார்ஜுன் கார்கேவின் ஆலோசனைகளை அடுத்து காங்கிரஸ் கட்சி மோசமாக அம்பலமாகிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது, ஆனால் அவற்றை முறையாக செயல்படுத்துவது கடினம் அல்லது சாத்தியமற்றது என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது. ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் அவர்கள் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின்போதும் மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார்கள். இப்போது, மக்கள் முன் மோசமாக அம்பலமாகி நிற்கிறார்கள்!
காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா என எதை எடுத்துக்கொண்டாலும் அவற்றின் வளர்ச்சிப் பாதையும், நிதி ஆரோக்கியமும் மோசமடைந்து வருகிறது. அவர்களின் 'உத்தரவாதங்கள்' என்று அழைக்கப்படுபவை நிறைவேற்றப்படாமல் கிடக்கின்றன. இது மாநில மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள பயங்கரமான வஞ்சகம். இத்தகைய அரசியலால் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்களுக்கான பலன்கள் மறுக்கப்படுகின்றன. அதோடு, தற்போதுள்ள திட்டங்களையும் அது நீர்த்துப்போகச் செய்கிறது.
காங்கிரஸின் போலி வாக்குறுதி கலாச்சாரத்துக்கு எதிராக நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஹரியானா மக்கள் காங்கிரசின் பொய்களை நிராகரித்து, நிலையான, முன்னேற்றம் சார்ந்த மற்றும் செயல் ஊக்கம் மிக்க அரசாங்கத்தை எப்படி விரும்பினார்கள் என்பதை சமீபத்தில் பார்த்தோம். காங்கிரஸுக்கு அளிக்கும் வாக்கு என்பது திறமையற்ற நிர்வாகம், மோசமான பொருளாதாரம், மிக மோசமான கொள்ளை ஆகியவற்றுக்கான வாக்கு என்பதை நாடு மிக அதிக அளவில் உணர்ந்து வருகிறது. இந்திய மக்கள் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் விரும்புகிறார்கள். கடந்த காலத்தில் இருந்த அதே நிலையை அல்ல.
» வாக்குறுதிகளால் மக்களை தவறாக வழிநடத்திய கார்கேவும் ராகுலும் மன்னிப்புக் கோர வேண்டும்: பாஜக
» ஒடிசாவில் மாங்கொட்டையில் தயாரிக்கப்பட்ட கூழ் குடித்து 2 பெண்கள் உயிரிழப்பு; 6 பேர் கவலைக்கிடம்
கர்நாடகாவில் ஆளும் கட்சிக்குள் அரசியல் போட்டி தீவிரமடைந்து உள்ளது. அதோடு, வளர்ச்சியைப் பற்றி அக்கறை காட்டாமல் கொள்ளையடிப்பதிலேயே காங்கிரஸ் குறியாக இருக்கிறது. அதோடு, தற்போதுள்ள திட்டங்களையும் திரும்பப் பெறப் போகிறார்கள். இமாச்சல பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. தெலங்கானாவில் விவசாயிகள் தங்களுக்கு உறுதியளித்த கடன் தள்ளுபடிக்காக காத்திருக்கின்றனர்.
இதற்கும் முன்பாக, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் அவர்கள் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு இதுபோல பல உதாரணங்கள் உள்ளன" என விமர்சித்துள்ளார்.
முன்னதாக, இன்று காலை பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்களை எச்சரித்துள்ளேன். உங்களால் முடிந்த அளவு மட்டும் வாக்குறுதிகளை அளிக்க வேண்டும். 5, 6, 10 அல்லது 20 உத்தரவாதங்களை அறிவிக்கக் கூடாது என்று கூறியுள்ளேன்.
நிதி ஆதாரத்தின் அடிப்படையில் உத்தரவாதங்கள் அறிவிக்கப்பட வேண்டும். இல்லையெனில், திவால் நிலை ஏற்படும். சாலைகள் போடுவதற்கு பணம் இல்லை என்றால், மக்கள் அனைவரும் உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். அரசாங்கம் தோல்வியுற்றால், வருங்கால சந்ததியினருக்கு கெட்ட பெயர்தான் மிஞ்சும்” எனத் தெரிவித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago