பெர்ஹாம்பூர்: ஒடிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் மேங்கோ கர்னல் கூழ் (மாங்கொட்டையால் தயாரிக்கப்பட்ட கூழ்) குடித்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 6 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து ஒடிசா போலீஸ் வட்டாரம் வெளியிட்ட தகவல்: டாரிங்பாடி தொகுதியின் மண்டிபங்கா கிராமத்தில் ஓட்ஸ் பால் அல்லது தண்ணீரில் வேகவைத்து தயாரிக்கப்படும் மேங்கோ கர்னல் கூழை சிலர் பெரும்பாலும் பெண்கள் புதன்கிழமை குடித்துள்ளனர்.
உயிரிழந்த இரண்டு பெண்களில் ஒருவர், கஜபதி மாவட்டத்தில் உள்ள மோகனா சமூக சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தார். அவர் அங்கு மேங்கோ கர்னல் கூழை குடித்ததால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். மற்றொரு பெண், எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
மற்ற ஆறு பேரும் மேங்கோ கர்னல் கூழை குடித்ததால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் உட்கொண்ட உணவு விஷமானதால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். முழுமையான ஆய்வுக்கு பின்பே எதனால் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர் என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago