கிழக்கு லடாக் எல்லையில் தொடங்கியது இந்திய - சீன ராணுவ ரோந்துப் பணி!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: லடாக்கின் டெம்சோக் பகுதியில் இந்திய-சீன துருப்புகளின் ஒருங்கிணைந்த ரோந்துப் பணி தொடங்கியதாக நமது ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து ராணுவம் வட்டாரம், “இந்திய மற்றும் சீன ராணுவங்களின் ஒருங்கிணைந்த ரோந்துப் பணி கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் தொடங்கியுள்ளது. டெப்சாங் பகுதியிலும் ரோந்து பணி விரைவில் தொடங்கும். இவ்விரு பகுதிகளிலும் குவிக்கப்பட்டிருந்த இரு நாட்டு படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மே 2020-ல் தொடங்கிய stand-off -ன் அனைத்து மோதல் பகுதிகளில் இருந்தும் இரு தரப்பு படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கை முடிவடைந்துவிட்டதை இது குறிக்கிறது.

வியாழன் அன்று தீபாவளியையொட்டி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிகளின் பல எல்லைப் புள்ளிகளில் இந்தியா மற்றும் சீனாவின் துருப்புகள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் ஐந்து இடங்களில் இனிப்பு பரிமாற்றம் நடந்தது.” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது 2020ல் எழுந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழிவகுக்கும் என்றும் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி அக்டோபர் 21 ஆம் தேதி டெல்லியில் தெரிவித்தார்.

பின்னணி: கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் பேட்ரோல் பாய்ண்ட் 14ல் இந்திய - சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. பல மணி நேரம் நீடித்த இந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த் தியாகம் செய்தனர். சீன தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். எனினும், அது குறித்த தகவலை அந்த நாடு மறைத்துவிட்டது. இந்த மோதலை அடுத்து, போருக்கு தயாராகும் நோக்கில் இந்தியா தனது ராணுவத்தை அங்கே குவித்தது. பதிலுக்கு சீனாவும் தனது ராணுவத்தை குவித்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை காரணமாக போர் பதற்றம் தணிக்கப்பட்டது. என்றாலும், படைகள் அதே இடத்தில் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் இருதரப்பு உறவை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டது.

இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, லடாக்கின் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் படைகளை விலக்கிக் கொள்வது என கடந்த 21-ம் தேதி இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. மேலும், ரோந்துப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், படைகளை விலக்கிக் கொள்ளும் பணி கடந்த 25ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், "கிழக்கு லடாக்கில் இந்தியா - சீனா இடையே படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை கடந்த அக். 30ம் தேதி முடிவடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்