மீண்டும் பெயரை மாற்றிய ஷியா வஃக்பு வாரிய முன்னாள் தலைவர் ரிஜ்வீ, ஜிதேந்திரா நாரயண் சிங் ஆனார்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப் பிரதேச ஷியா வஃக்பு வாரியத்தின் முன்னாள் தலைவரான வசீம் ரிஜ்வீ மீண்டும் தனது பெயரை மாற்றியுள்ளார். கடந்த 2001-ல் இந்துவாக மாறிய அவரின் புதுப்பெயர் ஜிதேந்திரா நாரயண் சிங்.

உத்தரப் பிரதேசத்தின் ஷியா மத்திய வஃக்பு வாரியத்தின் தலைவராக இருந்தவர் வசீம் ரிஜ்வீ. அப்போது அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். தொடர்ந்து தான் சார்ந்த இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவே பேசி வந்த அவருக்கு முஸ்லிம்கள் இடையே கடும் எதிர்ப்புகள் நிலவி வந்தது. இத்துடன் பாஜக ஆதரவு கருத்துகளையும் ரிஜ்வீ தெரிவித்து வந்தார்.

ஹரித்துவாரின் துறவிகள் மாநாட்டில் ரிஜ்வீ கலந்துகொண்டு பேசியதும் சர்ச்சையானது. இதற்காக, ரிஜ்வீ சார்ந்த ஷியா பிரிவினர் அவரை இஸ்லாத்திலிருந்து நீக்குவதாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ரிஜ்வீ கடந்த 2001, டிசம்பர் 6-ல் இஸ்லாத்தை விட்டு வெளியேறி இந்துவாக மதம் மாறினார்.

தனது மதமாற்றத்திற்கு பின்பு பேசிய ரிஜ்வீ, ‘உலகின் மிகவும் புனிதமானதாக சனாதனம் உள்ளது. மதம் மாறுவதற்கு இந்த நாளை நான் தேர்வு செய்யக் காரணம், இது கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட புனித நாள்’ எனத் தெரிவித்திருந்தார்.

உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்திலுள்ள தாஸ்னா மடத்தில் உள்ள அதன் சர்ச்சைக்குரிய தலைவரான யோகி நரசிங்கானந்த் சரஸ்வதியின் முன்னிலையில் ரிஜ்வீ இந்து மதத்திற்கு மாறினார். இந்த யோகி நரசிங்கானந்த் இஸ்லாத்தை அவமதிக்கும் கருத்துக்களை கூறியதாக கைதாகி சிறையில் உள்ளார்.

தனது மதமாற்றத்திற்கு பின்பு ரிஜ்வீ தனக்கான இந்து பெயராக ஜிதேந்தரா நாரயண் தியாகி என வைத்திருந்தார். இந்தப் பெயரையும் தற்போது மாற்றி இருக்கும் அவர், ஜிதேந்திரா சிங் என தனக்கு புதுப்பெயர் சூட்டிக் கொண்டுள்ளார். இந்தப் பெயர் மாற்றத்துடன் ஜிதேந்திரா, தியாகி என்பதை சிங் என மாற்றி தாக்கூர் பிரிவிற்கு மாறியுள்ளார்.

என்றாலும் இதுபோல், இந்துவாக மதம் மாறியவர்களுக்கு தாம் விரும்பும் உயரிய சமூகங்களில் இடம் அளிக்கப்படுவதாகத் தெரியவில்லை. ரிஜ்வீயின் மதமாற்றத்திற்கு பின்பு அவரது மனைவி, குழந்தைகள் அவரிடமிருந்து விலகிக் கொண்டனர். தாய், சகோதரர்கள் உள்ளிட்ட உறவினர்களும் ரிஜ்வீயை விலக்கி வைத்தது நினைவுக்கூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்