“நிதி ஆதாரத்துக்கு ஏற்ப மட்டுமே தேர்தல் வாக்குறுதிகள்” - மகாராஷ்டிரா காங்கிரஸுக்கு கார்கே வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: மாநிலத்தின் நிதி ஆதாரத்துக்கு ஏற்ப மட்டுமே தேர்தல் வாக்குறுதிகள் இருக்க வேண்டும் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்களிடம் தான் வலியுறுத்தி இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோருடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்களை எச்சரித்துள்ளேன். உங்களால் முடிந்த அளவு மட்டும் வாக்குறுதிகளை அளிக்க வேண்டும்.

5, 6, 10 அல்லது 20 உத்தரவாதங்களை அறிவிக்கக் கூடாது என்று கூறியுள்ளேன். நிதி ஆதாரத்தின் அடிப்படையில் உத்தரவாதங்கள் அறிவிக்கப்பட வேண்டும். இல்லையெனில், திவால் நிலை ஏற்படும். சாலைகள் போடுவதற்கு பணம் இல்லை என்றால், மக்கள் அனைவரும் உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். அரசாங்கம் தோல்வியுற்றால், வருங்கால சந்ததியினருக்கு கெட்ட பெயர்தான் மிஞ்சும்” எனத் தெரிவித்தார்.

கர்நாடகாவில் அமலில் உள்ள பெண்களுக்கான இலவச பேருந்துப் பயண திட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து அம்மாநில காங்கிரஸ் அரசு ஆலோசித்து வரும் நிலையில் கார்கே இவ்வாறு கூறி இருக்கிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மல்லிகார்ஜுன கார்கே, “நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தாமல் இத்திட்டத்தை அமல்படுத்த முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை பெறாமல் இத்திட்டம் அமலாக முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலாவதற்கு வாய்ப்பே இல்லை” என கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்