ஆகம சாஸ்திர வல்லுநர்கள் ஒப்புதல் அளித்தால் திருப்பதி ஏழுமலையான் கோயில் நகைகள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தெரிவித்தார்.
திருப்பதி திருமலையில் உள்ள அன்னமையா பவனில் நேற்று முன்தினம் தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம், அதன் தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தலைமையில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து புட்டா சுதாகர் யாதவ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆகம சாஸ்திர வல்லுநர்கள் ஒப்புதல் அளித்தால் ஏழுமலையானின் அனைத்து நகைகளும் பக்தர்களின் பார்வைக்கு கண்காட்சியாக வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.
பக்தர்களின் வசதிக்காக திருமலையில் ரூ.15 கோடி செலவில் புதிய கழிப்பறைகள் கட்டப்படும். 2017-18-ம் நிதியாண்டில் மட்டும், பக்தர்கள் காணிக்கை மற்றும் தலைமுடி ஏலத்தில் தேவஸ்தானத்திற்கு ரூ.133.32 கோடி வருவாய் கிடைத்துள்ளது. திருப்பதி கோவிந்தராஜ பெரும ாள் கோயில் விமான கோபுரத்துக்கு ரூ.32 கோடி செலவில் தங்க முலாம் பூசப்படும்.
இவ்வாறு சுதாகர் யாதவ் கூறினார்.
இக்கூட்டத்தில் திருப்பதி திருமலை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago