பக்தர்களின் பார்வைக்கு ஏழுமலையானின் நகைகள்: திருப்பதி தேவஸ்தானம் முடிவு

By என்.மகேஷ் குமார்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திருப்பதி ஏழுமலையானின் நகைகளை பக்தர்களின் பார்வைக்கு வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான தங்க, வைர நகைகள் குறித்து தற்போது பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தேவஸ்தான தலைமை அர்ச்சகராக பதவி வகித்து வந்த ரமண தீட்சிதர், ஏழுமலையானின் நகைகள் பல மாயமாகிவிட்டதாகவும், மைசூர் மகாராஜா காணிக்கையாக அளித்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிங்க் வைரத்தை காணவில்லை எனவும் புகார் எழுப்பினார்.

இந்நிலையில், திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் புட்டா சுதாகர் யாதவ் தலைமையில் அறங்காவலர் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நகை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஏழுமலையானின் அனைத்து நகைகளையும் பக்தர்களின் கண்காட்சிக்கு வைக்க அறங்காவலர் குழுவில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இதற்கு ஆகம விதிகள் ஒப்புக்கொள்கிறதா என்பதை அறிய, ஆகம வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்கப்பட உள்ளது. அதேபோல், சட்ட வல்லுநர்களிடமும் அலோசனை கேட்கவுள்ளோம். இதையடுத்து, இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையானுக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், விஜய நகர பேரரசர்கள், மைசூர் மகாராஜாக்கள், ஆங்கிலேயர்கள், நவாப்புகள், ஜமீன்கள், மிராசுதாரர்கள் உட்பட தற்போதைய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலர் கோடிக்கணக்கிலான தங்க, வைர ஆபரணங்களை காணிக்கையாக வழங்கி உள்ளனர். இதன் மதிப்பு பல்லாயிரம் கோடி இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த நகைகள் யாவும், பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டால் அதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியிருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்