புதுடெல்லி: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய தலைநகரில் புதன்கிழமை காற்று மாசின் அளவு குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ளது. எட்டு கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் எனப் பதிவாகியுள்ளது.
டெல்லியில் புதன்கிழமை காலை 9 மணிக்கு ஒட்டுமொத்த காற்றின் தரத்தின் குறியீடு 278 ஆக இருந்தது. முந்தைய நாளில் இது 268 ஆக இருந்தது. என்றாலும் நகரின் ஒட்டுமொத்த காற்றின் தரம் மோசம் என்ற நிலையிலேயே தொடர்ந்து நீடித்து வந்தது. சில நாட்களாக மிகவும் மோசம் என்ற நிலையில் தொடர்ந்து வந்த காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை வீசிய காற்றின் காரணமாக சற்று மேம்பட்டது. காற்றின் தரம் திங்கள் கிழமை 304 ஆகவும், ஞாயிற்றுக்கிழமை 359 ஆகவும் இருந்தது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின் படி, 36 கண்காணிப்பு மையங்கள் வழங்கிய தகவல்களில், ஆனந்த் விகார், அசோக் விகார், அயா நகர், பவானா, ஜஹாங்கீர்புரி, முந்த்கா, விவேக் விகார் மற்றும் வஷிர்புர் ஆகிய எட்டு இடங்களில் காலையில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்தது.
இதனிடையே, வெப்பநிலை இன்னும் குறையவில்லை. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியசாக, அதன் இயல்பான வெப்பநிலையை விட 4.9 அதிகமாக இருந்தது. காலை 8 மணியளவில் காற்றின் ஈரப்பதம் 83 சதவீதமாக இருந்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago