புதுடெல்லி: 3 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு அதன் தயாரிப்பு நிறுவனங்களிடம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பொதுமக்களின் உயிர்காக்கும் முக்கிய மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அந்த வகையில், புற்றுநோய்க்கு எதிரான டிராஸ்டுஸுமாப், ஓசிமெர்டினிப் மற்றும் துர்வலுமப் ஆகிய 3 மருந்துகளின் விலையை குறைக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் சுங்க வரிச் சலுகை ஆகிய பலன்களை நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நிறுவனங்கள் விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு என்பிபிஏ தெரிவித்துள்ளது. 2024-25 பட்ஜெட்டில் இந்த மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கும் சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago