லக்னோ: உத்தரபிர தேசத்தில் ரூ.6 கோடியில் சம்ஸ்கிருத கல்வி உதவித் தொகை திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அறிமுகம் செய்தார்.
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள சம்பூரனானந்த் சமஸ்கிருத பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.6 கோடியில் சம்ஸ்கிருத கல்வி உதவித் தொகை திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிமுகம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
பழமையான சமஸ்கிருத மொழியை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இதன்மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயனடைவார்கள். மேலும் இதனால் கூடுதலாக 69,195 சம்ஸ்கிருத மாணவர்களுக்கு நிதியுதவி கிடைக்கும். இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
சம்ஸ்கிருதம் தெய்வ மொழியாக கருதப்படுகிறது. அதேநேரம் அது அறிவியல் மொழி ஆகும். கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன துறைகளிலும் இதைப் பயன்படுத்த முடியும். தனி கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த மொழி தொழில்நுட்பக் கல்விக்கும் பொருந்தக் கூடியது ஆகும்.
» டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ரூ.120 கோடியை இழந்த இந்தியர்கள்: அரசு புள்ளிவிவரங்களில் தகவல்
» அரசு பள்ளிகளில் ரூ.74,527 கோடியில் உள்கட்டமைப்பு வசதி: பள்ளிக்கல்வித் துறை
பாரம்பரிய கல்வி முறைக்கு புத்துயிர் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, குருகுல பாணி உறைவிட பள்ளிகள் தொடங்கப்படும். இதன்மூலம் நாட்டின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் கல்வி வலுவடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago