மகாராஷ்டிராவில் 'வாக்கு ஜிகாத்' வெற்றி பெறாது: துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு ஜிகாத்' வெற்றி பெறாது என்று அந்த மாநில துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னா விஸ் தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் 20-ம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த சூழலில் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் தொடர் பாக அந்த மாநில துணை முதல்வரும் பாஜக மூத்த தலை வருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலில் 'வாக்கு ஜிகாத்' விவகாரம் எதிரொ லித்தது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்தனர். பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று நோக்கத் தோடு அவர்கள் செயல்பட்டனர். ஆனால் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் 'வாக்கு ஜிகாத்' வெற்றி பெறாது.

கடந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் அகாடி பிரதமர் மகா விகாஸ் பொய்களை பரப்பியது. நரேந்திர மோடி சாசனத்தை மாற்றப் அரசமைப்பு போகிறார். இடஒதுக்கீட்டை பாஜக ரத்து செய்யும் என்று காங்கிரஸும் அதன் கூட்டணி தலைவர்களும் பொய் பிரச்சாரம் செய்தனர். ராகுல் காந்தி இந்த பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றார். தற்போது மக்கள் உண் மையை புரிந்து கொண்டனர்.

அரசமைப்பு சாசனம், இடஒதுக் கீட்டின் பாதுகாவலராக பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார். எனவே வரும் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் எங்களது கூட்டணி அமோக வெற்றி பெறும். பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பாண்டவர்களை போன்றது. எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி கவுரவர் களை போன்றது. மகாபாரதத்தை போன்று மகாராஷ்டிராவில் பாண்ட வர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே போர் நடைபெறுகிறது. இந்த போரில் பாண்டவர்கள் (மகாயுதி கூட்டணி) வெற்றி பெறுவார்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டணி, ஆர்ப்பாட்ட கூட்டணி ஆகும். புல்லட் ரயில் உட்பட அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் எதிர்த்து எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.

எங்களைப் பொறுத்தவரை வளர்ச்சித் திட்டப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறோம். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு, மகாராஷ்டிராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. மகாராஷ்டிராவின்பால்கர் மாவட்டத்தில் அமைக்கப்படும் வடவன் துறைமுகம் அடுத்த சில ஆண்டுகளில்பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன்மூலம் மகாராஷ்டிராவின் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகம் பெறும். இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்