திருப்பதியில் 5 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

By செய்திப்பிரிவு

திருப்பதியில் நேற்று 5 ஓட்டல்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.

திருப்பதியில் வார இறுதி நாட்கள் என்பதால் வழக்கத்தை விட கூடுதலான பக்தர்களின் நடமாட்டம் இருந்தது. திருப்பதி மற்றும் திருமலையில் தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் நேற்று மிகவும் அவதிக்குள்ளாயினர். இந்நிலையில், திருப்பதி லீலா மஹால் சர்க்கிளில் உள்ள 3 தனியார் விடுதிகள், கபிலதீர்த்தம் எதிரே உள்ள ராஜ்பார்க் நட்சத்திர ஓட்டல் மற்றும் ராமானுஜ சர்க்கிளில் உள்ள மற்றுமொரு நட்சத்திர ஓட்டல் என மொத்தம் 5 ஓட்டல்களுக்கு நேற்று மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். உடனே இது குறித்து அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோப்பநாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீஸார் சம்பவ இடங்களுக்கு சென்று அங்கு தங்கி இருந்தவர்களை சிறிது நேரம் வெளியே அனுப்பி விட்டு, ஒவ்வொரு அறையிலும் மற்றும் அந்த விடுதி முழுவதிலும் ஆய்வு நடத்தினர். இறுதியில் இது வீண் புரளி என தெரியவந்தது. இது குறித்து திருப்பதி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்