புதுடெல்லி: உயர்கல்விக்காக தங்களது குழந்தைகளை கனடாவுக்கு அனுப்பவேண்டாம் என்று பெற்றோருக்கு கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் வர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவில் கடந்த ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். அதில் சஞ்சய் வர்மாவையும், பிற இந்திய தூதரக அதிகாரிகளையும் கனடா தொடர்புபடுத்தியது. இந்தக் குற்றச்சாட்டுகளால் கடும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, இந்தியாவில் இருந்து கனடா தூதர் மற்றும் அந்நாட்டின் 5 தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டதுடன், கனடாவில் இருந்து சஞ்சய் வர்மா மற்றும் 5 இந்திய தூதரக அதிகாரிகளை தாயகத்துக்கு திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் அறிவித்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கு வந்துள்ள தூதர் சஞ்சய் வர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த அக்டோபர் 12-ம் தேதி மாலையே கனடா வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு எனக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதற்கு அடுத்த நாள் அமைச்சகத்தின் அலுவலகத்தில் நானும் கனடாவுக்கான இந்திய துணை தூதரும் நேரில் சென்றோம். அப்போது என்னுடன் 5 இந்திய அதிகாரிகளை அவர்கள் நிஜ்ஜார் கொலையுடன் தொடர்புடுத்தி கூறினர். எனவே, எங்களிடம் கனடா காவல் துறை விசாரணை நடத்த தூதரக அதிகாரங்களைத் துண்டிக்குமாறு அவர்கள் தெரிவித்தனர்.
தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முன் உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த விவகாரத்தில் அவ்வாறு நடக்கவில்லை. உடனடியாக எங்களிடம் விசாரணை நடத்த அவர்கள் தயாராக இருந்தனர். இது, எங்களை தவறான முறையில் நடத்தியதுடன் கனடா அதிகாரிகள் முதுகில் குத்தியதற்கு சமமான நடவடிக்கையாகும். பெரும் துரோகமாகும்.
» பாதயாத்திரையாக முதியோர் திருமலைக்கு வரவேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்
» பின்லேடன் பதுங்கி இருந்த பாகிஸ்தானின் அபோதாபாத்தில் தீவிரவாத மையங்கள்: புதிய தகவல்கள் வெளியீடு
குற்றச் செயல்களில் ஈடுபடும் காலிஸ்தான் அமைப்பினர் மீது அரசியல் ஆதாயத்துக்காக கனடா அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. கனடாவில் வசிக்கும் 8 லட்சம் சீக்கியர்களில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் எண்ணிக்கை 10,000-க்குள் மட்டுமே இருக்கும். அவர்களுக்கு சுமார் ஒரு லட்சம் சீக்கியர்கள் மட்டுமே ஆதரவு தெரிவிக்கின்றனர்மீதமுள்ள சீக்கியர்களின் ஆதரவை பெற அவர்களை காலின்தான் பிரிவினைவாதிகள் பல்வேறு வகையில் மிரட்டி வருகின்றனர்.
தற்போது, கனடாவில் நிலைமை சரியில்லை. எனவே, கனடாவில் உயர்கல்வி பயில்வதற்காக தங்களது குழந்தைகளை இந்தியாவிலுள்ள பெற்றோர் அனுப்பவேண்டாம். தரமற்ற வாழ்க்கை நிலைமை, வேலையின்மை, அதிகரித்து வரும் காலிஸ்தான் பிரச்சினை போன்றவை நிலவி வருவதால் இந்திய மாணவர்கள் அங்கு செல்லவேண்டாம்.
நல்ல வசதி படைத்த மாணவர்கள் கனடாவுக்கு உயர்கல்வி பயில வரும்போது, அவர்கள் நெரிசலான அறைகளில் தங்குமாறு வற்புறுத்தப்படுகின்றனர். ஒரே அறையில் 8 மாணவர்கள் இருக்குமாறு நிர்பந்தம் செய்யப்படுகின்றனர். தரமான கல்வி கிடைக்கும் என்ற எண்ணத்தில் வருபவர்கள், குறைந்த அளவிலான வகுப்புகள் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் சேர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும், அவர்கள் குறைந்த ஊதியத்தில் பகுதி நேரப் பணியில் சேரவும் இது வழிவகுக்கும்.
ஒரு வாரம் முழுவதும் நிறுவனத்திலோ அல்லது கடையிலோ தினக்கூலி போன்று அவர்கள் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. கல்வி மீது அவர்கள் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு அவர்கள் பகுதி நேர வேலைக்குத் தள்ளப்படுகின்றனர். டாக்ஸி டிரைவர் போன்ற வேலைகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
கனடாவில் உள்ள சமூக நிலைமை கவலை அளிக்கிறது. இளம் மாணவர்களிடையே அவர்கள் காலிஸ்தான் விவகாரங்களை விதைக்கின்றனர். காலிஸ்தானுக்கு ஆதரவு தராத மாணவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. காலிஸ்தான் இயக்கத்தில் சேரும் அப்பாவி மாணவர்கள் கிரிமினல்களாகவும், கேங்ஸ்டர்களாகவும், காலிஸ்தானி கிரிமினல்களாகவும் மாறுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago