புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம் செய்யப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக் காலம் வரும் நவம்பர் 10-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயரை சந்திரசூட் சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தார்.
அவரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 51-வது புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா வரும் நவம்பர் 11-ம் தேதி பதவியேற்க உள்ளார். 2025 மே 13-ம் தேதி வரை 6 மாதங்களுக்கு அவர் தலைமை நீதிபதியாக செயல்படுவார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் சந்திரசூட் பதவியேற்றார். உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கான ஓய்வு வயது 65 ஆகும். சந்திரசூட்டுக்கு அடுத்த நிலையில் மூத்த நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா உள்ளார்.
சஞ்சீவ் கண்ணா 1960-ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர். 1980-ம் ஆண்டு டெல்லி ஸ்டீபன் கல்லூரியில் சட்டம் பயின்றார். 2016-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தேர்தல் பத்திர நடைமுறையை ரத்து செய்த ஐந்து நீதிபதி அமர்வில் சஞ்சீவ் கண்ணாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago