ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன.
முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம், காங்கிரஸ், ஆர்ஜேடி, சிபிஐ (எம்எல்) ஆகிய இண்டியா கூட்டணி கட்சிகள் இத்தேர்தலை இணைந்து சந்திக்கின்றன. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 70 இடங்களில் ஜேஎம்எம், காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் போட்டியிட முடிவு செய்தன. எஞ்சிய 11 தொகுதிகளை ஆர்ஜேடி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி 21 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டது.
இந்நிலையில் 35 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) நேற்று வெளியிட்டது. இதில் முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ஹேமந்த் சோரன்: சாகிப்கஞ்ச் மாவட்டம் பர்ஹைத் தொகுதியில் ஹேமந்த் சோரனும் கிரிதி மாவட்டம் காண்டே தொகுதியில் கல்பனாவும் போட்டியிடுகின்றனர். இதுபோல் ஜேஎம்எம் கோட்டையான தும்காவில் ஹேமந்த் சோரனின் தம்பி பசந்த், நலா தொகுதியில் சபாநாயகர் ரவீந்திர நாத் மகதோ போட்டியிடுகின்றனர்.
» மகாராஷ்டிர தேர்தல்: சிவசேனா முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
» 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள்: மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்
5 அமைச்சர்கள் உட்பட 21 எம்எல்ஏக்களுக்கு ஜேஎம்எம் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் அவர்களின் தொகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளனர். முதல்பட்டியலில் இடம்பெற்றுள்ள அமைச்சர் மதிலேஷ் குமார் தாக்குர் உள்ளிட்ட 6 பேர் ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டதாக ஜேஎம்எம் பொதுச் செயலாளர் வினோத் குமார் பாண்டே கூறினார். இதுபோல் இண்டியா கூட்டணியின் மற்றொரு கட்சியான ஆர்ஜேடி நேற்று 6 வேட்பாளர்களை அறிவித்தது.
இவர்களில் மாநில ஆர்ஜேடி தலைவர் சஞ்சய் குமார் சிங் யாதவ் ஹுசைனாபாத் தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் சுரேஷ் பாஸ்வான் தியோகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சத்யானந்த் போக்தாவுக்கு ஆர்ஜேடி இம்முறை வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால் அவரது மருமகளுக்கு சத்ரா தொகுதியில் வாய்ப்பு வழங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago