ஹைதராபாத்தில் நாய் துரத்தியதால் 3-வது மாடியிலிருந்து குதித்தவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் தெனாலியை சேர்ந்தவர் உதய் (23). இவர் ஹைதராபாத்தில் உள்ள ராமசந்திராபுரம் அஷோக்நகரில் வசித்து வந்தார். இவர் கடந்தஞாயிற்றுக்கிழமை இரவு சந்தாநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நண்பர்களுடன் சென்றார். நண்பர்கள் அனைவரும் அந்த ஓட்டலின் 3-வது மாடிக்கு சாப்பிடச் சென்றனர்.

அப்போது அங்கிருந்த நாய் ஒன்று, உதய்யை கண்டதும் குரைத்துக்கொண்டே அவரை துரத்தியது. இதனால் பயம் அடைந்த உதய், ஓட்டலின் பால்கனியில் ஓடியுள்ளார். அங்கும் நாய் துரத்தி வருவதை பார்த்து, அங்குள்ள ஜன்னலை திறந்து கீழே குதித்துள்ளார்.

ஆனால், அது 3-வது மாடி என்பதால் உதய் நேராக சாலையில் விழுந்து அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து சந்தாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்