புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த ஒருவர் டெல்லி உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “எனது மனைவி ஒரு திருநங்கை. திருமணத்துக்கு முன் இந்த உண்மையை அவர் மறைத்துவிட்டார். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற் காக அவருக்கு மத்திய அரசு மருத்துவமனையில் பாலின பரிசோதனை நடத்த டெல்லி போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை வழக்கறிஞர் அபிஷேக் குமார் சவுத்ரி தாக்கல் செய்தார். அவர் கூறுகையில், “ஒருவரின் பாலினம் அல்லது பாலின அடையாளம் என்பது தனிப்பட்ட விஷயம். என்றாலும் திருமணம் என்று வரும்போது இரு தரப்பினரின் உரிமைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
முன்னதாக, மனுதாரர் தனது மனைவியின் பரிசோதனைக்காக மருத்துவக் குழுவை அமைக்க கோரி குற்ற நடைமுறைகள் சட் டத்தில் 151-வது பிரிவின் கீழ் விசாரணை நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், மருத்துவப் பரிசோதனைக்கான அவரதுமனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago