திருவனந்தபுரம்: நேரு குடும்பம் வயநாடு மக்களை ஏமாற்றி விட்டதாக பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இவர் தேர்தலில் போட்டியிடுவது இதுதான் முதல் முறை. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யன் மோகேரியும் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர்.
வயநாடு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் கூறியதாவது: வயநாடு தொகுதியில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். இதற்கு காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பம் மீதான எதிர்ப்பு மனநிலை, உள்ளூர் அரசியல்வாதியாக நான் செய்து வரும் பணிகள், பிரதமர் மோடி மீதான நல்லெண்ணம் ஆகிய3 சாதகமான அம்சங்கள் உள்ளன.
தேர்தல் அனுபவம் இல்லை: கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுபோல பிரியங்கா காந்தி பரிச்சயமானவர் என்பது உண்மைதான். ஆனால் அவருக்கு தேர்தல் அனுபவம் இல்லை. நேரு குடும்பமும் காங்கிரஸ் கட்சியும் வயநாடு தொகுதி மக்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்திக் கொண்டது. இதன் மூலம் அப்பகுதி மக்களை ஏமாற்றி உள்ளனர்.
» கனவுகள் நனவாகும் வரை ஓய்வு இல்லை: தனியார் ஊடக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தகவல்
» மதச்சார்பற்ற நாடாக இருப்பதை விரும்பவில்லையா? - சுப்பிரமணியன் சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டபோது நேரு குடும்பத்தினர் தங்களுக்கு உதவவில்லை என்பதை புரிந்துகொண்டனர். எனவே, பாஜகவின் வெற்றி உறுதி. வயநாடு தொகுதி மக்களின் இதயங்களை பிரதமர் மோடி வென்றுள்ளார். சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் கேரளாவில் முதல் முறையாக திருச்சூர் தொகுதியில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியே இதற்கு சாட்சி. அந்த வகையில் வயநாடு தொகுதியில் 2-வது வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
52 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago