மகளிர் ஆணைய தலைவராக விஜயா கிஷோர் நியமனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய மகளிர் ஆணைய தலைவராக இருந்தவர் ரேகா சர்மா. இவரது பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில் இந்த ஆணையத்தின் புதிய தலைவராக விஜயா கிஷோர் ராஹத்கர் என்பவரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.

தேசிய மகளிர் ஆணைய சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டு காலம் அல்லது 65 வயது இதில் எது முன்போ அதுவரை பதவியில் இருப்பார். இவரது நியமனம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயா ராஹத்கர் இதற்கு முன் மகராஷ்டிரா மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும், அவுரங்காபாத் மேயராகவும் பதவி வகித்துள்ளார். பாஜக மகளிர் அணியின் தலைவராகவும், பாஜக தேசிய செயலாளராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.

இதோடு தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய உறுப்பினராக டாக்டர் அர்ச்சனா மஜும்தார் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் 3 ஆண்டு காலம் இப்பதவியில் இருப்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்