கிருஷ்ணா நதியில் குளிக்க சென்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் மாயம்: மீட்கும் பணி தீவிரம்

By என்.மகேஷ் குமார்

கிருஷ்ணா நதியில் குளிக்க சென்ற 4 பொறியியல் கல்லூரி மாணவர்கள் தன்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகே கஞ்சிக செர்லா பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 5 மாணவர்கள் நேற்று மாலை, கிருஷ்ணா மாவட்டம், இப்ரஹிம் பட்டினம் பகுதியில் உள்ள ‘பவித்ர சங்கமம்’ எனும் இடத்திற்கு சுற்றுலா சென்றனர். அங்கு, கிருஷ்ணா நதியில் முதலில் ஒரு மாணவர் இறங்கி குளிக்க சென்றார்.

தண்ணீர் வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் அவர் திடீரென அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து 3 பேர், உடனடியாக கிருஷ்ணா நதியில் குதித்து அந்த மாணவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், இவர்களும் சேர்ந்து அடித்து செல்லப்பட்டனர். இதனை கண்ட மற்றொரு மாணவர், அப்பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், கிராம மக்களும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் இணைந்து மூழ்கிய மாணவர்களை மீட்க முயன்றனர். ஆனால், இரவு நேரமானதால் காரணத்தினால் மீட்பு பணிகள் கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தியதில், பிரவீண் (18), சைதன்யா (18), ஸ்ரீநாத் (19), ராஜ்குமார் (19) என தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்