பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் அமல்படுத்த வேண்டும்: ஒய்.எஸ். ஷர்மிளா வலியுறுத்தல்

By என். மகேஷ்குமார்

விஜயவாடா: ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா நேற்று விஜயவாடா பேருந்து நிலையத்தில் இருந்து தெனாலி வரை அரசு பஸ்ஸில் டிக்கெட் எடுத்து சக பெண் பயணிகளுடன் பயணம் செய்தார்.

ஒய்.எஸ். ஷர்மிளாஅப்போது அவர் பேசியதாவது: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பதவியேற்று 5 மாதங்கள் ஆகின்றன. ஆனால், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை அமல்படுத்தவில்லை. அவர் அளித்த சூப்பர் சிக்ஸ் தேர்தல் வாக்குறுதி என்னவானது? அவர் உடனடியாக அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

இதிலும் ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் இலவச திட்டம், பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை உடனடியாக அவர் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது பேருந்தில் டிக்கெட் வாங்கி பயணம் செய்த அனைத்து பெண்களும் டிக்கெட்டுகளை காண்பித்தபடி, ‘‘எங்களுக்கு எப்போது இலவச பஸ் பயணம் நாயுடு சார்?” என கோஷம் போட்டவாறு தெனாலி வரை பயணம் செய்து நூதனமான முறையில் ஆர்பாட்டம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்