லெபனானுக்கு 33 டன் மருந்துகளை அனுப்பியது இந்தியா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: போரினால் பாதிக்கப்பட்டு உள்ள லெபனான் மக்களுக்கு உதவ மத்திய அரசு சார்பில் 33 டன் மருந்துகள் அனுப்பப்பட்டு உள்ளன.

டெல்லியில் இருந்து லெபனானுக்கு விமானம் மூலம் நேற்று மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் ராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இஸ்ரேல் ராணுவம் நேரடியாக லெபனான் மீது வான்வழி தாக்குதலை நடத்தியது.

தற்போது இஸ்ரேல் எல்லையை ஒட்டிய லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகவும் முன்னேறி வருகிறது. இருதரப்பு போரில் லெபனானில் இதுவரை 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த சூழலில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள லெபனான் மக்களுக்கு உதவ மத்திய அரசு சார்பில் 33 டன் மருந்துகள் அனுப்பப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “லெபனான் நாட்டுக்கு மனிதாபிமான அடிப்படையில் 33 டன் மருந்துகள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்த தொகுப்பில் இதய நோய், நுரையீரல் நோய் உட்பட பல் வேறு வகையான நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் உள்ளன’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்