பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிகளின் பெயர்களும் மாற்றப்பட்டு, வால்மீகியின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (அக்.17) கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் வால்மீகியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கர்நாடக அரசு பழங்குடியின மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரிகளின் தரம் ரூ.205 செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிகளின் பெயர்களும் மாற்றப்பட்டு, மகரிஷி வால்மீகியின் பெயரை சூட்டப்படும். ரெய்ச்சூர் பல்கலைக்கழகத்துக்கும் வால்மீகியின் பெயர் சூட்டப்படும்.” என தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு வால்மீகி அமைப்புகளும், நாயகா உள்ளிட்ட பழங்குடியின அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
» இணையவழி, தொலைதூர படிப்புகளுக்கான அங்கீகாரம்: உயர்கல்வி நிறுவனங்கள் அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்
» ‘லாரன்ஸ் பிஷ்னோயுடனான பகையை முடிக்க ரூ.5 கோடி’ - சல்மான் கானுக்கு புதிய மிரட்டல்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago