குவாஹாட்டி: பண மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் செயலி விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
HPZ டோக்கன் எனப்படும் செயலி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாக தமன்னாவுக்கு அந்த செயலி நிறுவனம் தொகை ஒன்றை செலுத்தியுள்ளது. HPZ டோக்கன் செயலி மூலம் பல்வேறு முதலீட்டார்களை ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் இதுவரை 76 சீன நிறுவனங்கள் உட்பட மொத்தம் 299 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களிடம் பண மோசடி செய்வதற்காகவே இந்த செயலி பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செயலி நிர்வாகம் நடத்திய விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இதில் கலந்து கொண்டதற்காக அவருக்கு ஒரு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், வியாழக்கிழமை (அக்.17) அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமன்னா தனது பெற்றொருடன் ஆஜரானார்.
» ஹமாஸ் தலைவர் யஹ்யா கொலை? - டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்ய இஸ்ரேல் திட்டம்
» “பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்?” - ஆர்.பி.உதயகுமார்
அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தமன்னா மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago