சண்டிகர்: ஹரியானா முதல்வராக நயாப் சிங்சைனி இன்று பதவியேற்கவுள்ளார். ஹரியானா முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, இந்த மாதம் ஹரியாணாவில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 இடங்களில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. 37 இடங்களை வென்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளது.
இந்நிலையில், ஹரியாணா சட்டப்பேரவையின் பாஜக தலைவரை தேர்வு செய்யும் கூட்டம், சண்டிகரில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்றுநடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஹரியானா சட்டப் பேரவை பாஜகதலைவராக நயாப் சிங் சைனி ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.கூட்டத்துக்குப் பின்னர் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஒருமனதாக ஒரு முன்மொழிவு பெறப்பட்டது. கிரிஷன்பேடி மற்றும் அனில் விஜ் ஆகியோர் இதனை முன்மொழிந்தனர்.
அவர்கள், சட்டப் பேரவை கட்சியின் தலைவராக நயாப் சிங் சைனியின் பெயரைப் பரிந்துரை செய்தனர். நயாப் சிங் சைனியை பாஜகசட்டப் பேரவைக் கட்சி தலைவராக நான் அறிவிக்கிறேன்” என்றுகூறினார். இதனைத் தொடர்ந்து,மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் சண்டிகரில் உள்ள ஆளுநர்மாளிகைக்கு சென்ற நயாப் சிங்,பாஜக எம்.எல். ஏ.க்களின் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி ஆட்சிஅமைக்க உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து பஞ்ச்குலாவில் உள்ள தசரா மைதானத்தில் இன்று (அக்.17) காலை 10 மணிக்கு நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. இந்த விழாவில்,பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
46 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago