ரமலான் கொண்டாட்டம் இல்லை: வாகா எல்லையில் இனிப்புகள் பரிமாறிக்கொள்ளாத இந்திய-பாகிஸ்தான் படைகள்

By ஏஎன்ஐ

எல்லையில் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியதால், ரமலான் பண்டிகையான இன்று, வாகா எல்லையில் இந்திய, பாகிஸ்தான் படையினர் இனிப்புகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவில்லை.

ரமலான் பண்டிகையின் போது, வாகா எல்லையில் உள்ள பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இந்தியப் படையினருக்கு இனிப்புகளை வழங்குவார்கள். அதேபோல இந்தியப் படையினரும் பாகிஸ்தான் படையினருக்கு இனிப்புகளைவழங்கி ரமலான் வாழ்த்துகள் கூறுவார்கள். ஆனால், இந்த ஆண்டு இருதரப்பினரும் எந்தவிதமான வாழ்த்துகளையும் கூறவில்லை, இனிப்புகளையும் வழங்கிக் கொள்ளவில்லை.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டதில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

மேலும், செவ்வாய்க்கிழமை இரவு சம்பா மாவட்டத்தில் ராம்கார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் துணை லெப்டினென்ட் உள்ளிட்ட எல்லைப் பாதுகாப்புப் படையின் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 2003-ம் ஆண்டு செய்யப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தீவிரமாக கடைப்பிடிப்போம் என்று கடந்த 2-ம் தேதி இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளும் உறுதி ஏற்றிருந்த நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த 6 மாதங்களில் இதுவரை ஆயிரம் முறை எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதன் காரணமாக இன்று ரமலான் பண்டிகைக்கு இரு நாட்டுப் படை அதிகாரிகளும் இனிப்புகளை பரிமாறிக் கொள்ளவில்லை.

கடந்த மாதம் ஜம்மு, கதுவா, சம்பா ஆகிய எல்லை ஓர மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக ராக்கெட் குண்டுகளாலும், துப்பாக்கியாலும் சுட்டுத் தாக்குதல் நடத்தியதால், ஏறக்குறைய 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி வேறு இடத்துக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்