ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத்தில் மோண்டா மார்க்கெட் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்தியாலம்மன் கோயில் உள்ளது.
ஞாயிற்றுக் கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் கோயில் இரும்புக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். பிறகு கோயில் கதவுகள் மற்றும் கருவறையில் உள்ள அம்மன் சிலையை இரும்பு கம்பியால் அடித்து சேதப்படுத்தி உள்ளார். இதையடுத்து அவர் வெளியே வரும்போது, பக்தர்கள் ஓடிவந்து அந்த நபரை பிடித்தனர். மேலும் அவரை அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
அவர் மீது செகந்திராபாத் கன்டோன்மெண்ட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் குற்றவாளி பற்றிய வேறு எந்த தகவலையும் போலீஸார் வெளியிடவில்லை.
இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. உடைக்கப்பட்ட அம்மனின் திருவுருவம் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் வெகுண்டெழுந்த பக்தர்கள்நேற்று காலையில் கோயில் முன்சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மத்திய இணைஅமைச்சர் கிஷண் ரெட்டி சம்பவஇடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். போலீஸ் நிலையத்திற்கு சென்று, கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் அவர் ஆய்வு செய்தார்.இதையடுத்து அம்மன் சிலையைசேதப்படுத்தியவர் மீது கண்டிப்பாகநடவடிக்கை எடுக்கப்படும் எனபோராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதி அளித்தார். இந்த சம்பவத்தால் அம்மன் கோயில், சிலமசூதிகள், சார்மினார் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago