கவுரி லங்கேஷ் கொலையில் ஜாமீனில் வந்தவர்களுக்கு விழா: இந்துத்துவ அமைப்பு நடத்தியது

By இரா.வினோத்


பெங்களூரு: பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் வழக்கில் ஜாமீனில்வெளியே வந்தவர்களுக்கு இந்துத்துவ அமைப்பினர் பாராட்டு விழா நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (55) கடந்த 2017-ம் ஆண்டு செப். 5-ம் தேதி வீட்டின் அருகே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 7 ஆண்டுகளாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த 9-ம்தேதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பரசுராம் வக்மோர், மனோகர்யாதவ் உள்ளிட்ட 6 பேருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 6 பேரும் கடந்த 11-ம் தேதி மாலை சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுராவுக்கு சென்ற 6 பேரும் ச‌த்ரபதி சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவித்தனர். அங்கு குவிந்திருந்த இந்துத்துவ அமைப்பினர் 6 பேருக்கும் காவி சால்வை, மாலை அணிவித்து வரவேற்றனர். மேலும் ‘ஜெய் சனாதன் தர்மா' எனவும் ‘பாரத் மாதாகி ஜே' எனவும் முழக்கம் எழுப்பினர்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஹனுமன் சேனா அமைப்பின் சார்பில் 6 பேருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. அவர்களுக்கு சால்வை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இது தொடர்பான‌ வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

56 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்