ஏழுமலையான் கோயில் முறைகேடுகளை கேட்டால் ரூ.100 கோடி அபராதமா?: முன்னாள் பிரதான அர்ச்சகர் மீண்டும் குற்றச்சாட்டு

By என்.மகேஷ் குமார்

திருப்பதி தேவஸ்தான முறைகேடுகளை தட்டிக் கேட்டதால் ரூ.100 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்வதா என முன்னாள் பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதரை தேவஸ்தான அதிகாரிகள் பணி நீக்கம் செய்தனர். அரசர் காலத்து நகைகள் மாயமாகி விட்டன. ஆகம விதிகளை அதிகாரிகள் மீறுகிறார்கள் என்று குற்றம் சாட்டிய ரமண தீட்சிதர், இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். இவரது குற்றச்சாட்டுகளை மறுத்த தேவஸ்தானம், ரமண தீட்சிதர் மீது ரூ.100 கோடிக்கு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் ரமண தீட்சிதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேவஸ்தானத்தில் நடைபெறும் அவலங்களை எடுத்து கூறிய என் மீது ரூ.100 கோடிக்கு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளனர். இது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. ஏழுமலையானின் திருஆபரணங்கள் பாதுகாப்பாக உள்ளது என்பதை தேவஸ்தானத்தினர் நிரூபிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு முறைகேடுகளை தட்டிக் கேட்டதற்காக மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்வதா? திருப்பதி கோயிலில் பக்தர்கள் செல்ல இயலாத 2 இடங்கள் குறித்து பல்வேறு கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளும் தெரிவிக்கின்றன.

இந்த இடங்களில் அரசர் காலத்து நகைகள் வைக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், ஆகம சாஸ்திர ஆலோசகராக இருந்த என்னையும் கேட்காமல் நைவேத்தியம் தயாரிக்கும் இடத்தில் கட்டுமான பணிகள் நடத்த யார் அனுமதி கொடுத்தது? இதனால், உலகிற்கே படி அளக்கும் ஏழுமலையானுக்கு சுமார் 25 நாட்கள் வரை சரிவர நைவேத்தியம் படைக்கவில்லை. இதனால்தான் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தினேன். இதற்காகத்தான் என்னை வயது வரம்பை காரணம் காட்டி பணியில் இருந்து அகற்றினர். பரம்பரை பரம்பரையாக பணியாற்றும் வம்சாவளியினரை பணியில் இருந்து அகற்ற தேவஸ்தானத்தினருக்கோ, அல்லது அரசுக்கோ அதிகாரம் இல்லை. இவ்வாறு ரமண தீட்சிதர் குற்றம் சாட்டியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்