மும்பை: பல ஆயிரம் வைரங்களை பதித்து உருவாக்கப்பட்ட ரத்தன் டாடா புகைப்படம் இன்ஸ்டாகிரா மில் வைரலாகி அது பல லட்சம் இணையவாசிகளின் இதயங்களை வென்று சாதனை படைத்து உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேரந்த வைர வியாபாரி ஒருவர் ரத்தன் டாடா மீது பேரன்பு கொண்டவர். ரத்தன் டாடா மறைவுக்கு தனித்துவமான முறையில் அஞ்சலி செலுத்த நினைத்த அவர், 11,000 அமெரிக்க வைரங்களை பதித்து ரத்தன் டாடா உருவத்தை உருவாக்கி அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இதற்கு, இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வீடியோவை இதுவரை 5.5 லட்சம் பேர் லைக் செய்ததுடன், ஆயிரக்கணக்கானோர் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ரத்தன் டாடா என்ற தன்னிகரில்லா தலைவரை பெருமைப்படுத்த இந்த 11,000 வைரங்கள் போதுமானதாக இருக்காது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வேறு சிலர் ரத்தன் டாடாதான் உண்மையான வைரம் என்று கூறி அவரை பெருமைப் படுத்தியுள்ளனர்.
இன்னும் சிலர், அந்த 11,000 வைரம் ரத்தன் டாடா என்ற ஒரு வைரத்துக்கு ஈடாகாது என பதி விட்டு ரத்தன் டாடா மீது தங்க ளுக்குள்ள அன்பை வெளிப்படுத் தியுள்ளனர். தன்னலம் கருதாது பிறர் நலத்துக்காக கோடி கோடியாய் அள்ளிக்கொடுத்து வாழ்ந்து மறைந்த ரத்தன் டாடாவுக்கு இதுவரை இல்லாத வகையில் நெட்டிசன்கள் தங்களது அன்பை, அஞ்சலியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago