சண்டிகர்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் ஹரியானாவின் சிர்ஸா தொகுதி எம்பியுமான குமாரி செல்ஜா, ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது குறித்து கூறியதாவது:
காலை வரையில் கட்சித் தொண்டர்கள் அனைவரும் பெரும் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்துள்ளோம். இந்தத் தோல்விக்கு யார் பொறுப்பு? ஹரியானாவில் காங்கிரஸை ஆட்சிக்குக் கொண்டுவர கட்சி தொண்டர்கள் கடந்த 10 ஆண்டுகளாக உழைத்து வந்தனர். ஆனால், இம்முறையும் அவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. காங்கிரஸ் தலைமை ஹரியானாவில் கட்சி நிலவரத்தை அலச வேண்டும். இந்தத் தோல்விக்கு யார் காரணம் என்பதை அடையாளம் காண வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவரும் ஹரியானா மாநில முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடாவுக்கும் குமாரி செல்ஜாவுக்கும் சமீபமாக மோதல் முற்றி வந்தது. ஹரியானா தேர்தலில், காங்கிரஸ் தலைமை, பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு முன்னுரிமை அளித்தது.
இதனால், தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து குமாரி செல்ஜா விலகியே இருந்தார். இந்நிலையில், தேர்தலில் காங்கிரஸ் தோற்றுள்ள நிலையில், அதற்கு பூபிந்தர்ஹூடாவே காரணம் என்பதை மறைமுகமாக சுட்டும் வகையில் செல்ஜா கருத்து தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago