காங்கிரஸ் தலைவர் கமல்நாத் என் அப்பா வயதுள்ளவர், அவருக்கு ஷூ லேஸ்களை கட்டிவிட்டதில் என்ன தவறு? - என்று மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சியோனியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத்துக்கு கால் ஷூ லேஸ்களை கட்சி எம்எல்ஏ ஒருவர் கட்டிவிட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
இமாச்சல பிரதேச முன்னாள் ஆளுநரும் காங்கிரஸ் தலைவருமான ஊர்மிளா சிங்கின் நினைவஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற பின்னர் இந்நிகழ்வு நடந்துள்ளது.
கமல்நாத்தின் ஷூ லேஸ்களை சிங் கட்டிவிட்டது வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலான பின்னரே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த வீடியோ காட்சிகள் நம் புருவங்களை உயர்த்திய போதிலும், காங்கிரஸ் கட்சி தலைவருக்கு மரியாதையை வெளிப்படுத்த இது ஒரு வழி என்று சிங் கூறியிருப்பது மேலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ரஜ்னீஷ் சிங் ஏஎன்ஐயிடம் தெரிவித்ததாவது:
''அவர் (கமல்நாத்) எனக்கு தந்தை போல. அவரை நிறைய மதிக்கிறேன். நான் அவரது கால்களைத் தொண்டு வாழ்த்து பெற்றுள்ளேன். அவர் என் குடும்பத்திற்கு, குறிப்பாக என் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர். காங்கிரஸ் கட்சி தலைவருக்கு மரியாதையை வெளிப்படுத்த இது ஒரு வழியும்கூட. அதேநேரம் பொதுமக்களின் பார்வையில் இது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. ஊடகங்களும் இதை ஊதி பெரிதாக்குகின்றன.
இந்த சம்பவம் எந்தவொரு சர்ச்சையும் ஏற்படுத்தக்கூடாது, ஏனென்றால் கமல்நாத்ஜி ஊர்மிளா சிங்கிற்கு அஞ்சலி செலுத்திய போது பலரும் உடன் இருந்தனர், கூட்டத்தில் அவர் தனது காலணிகளைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது, அதை நான் கவனித்துவிட்டேன். அதை நான் அவருக்கு அதைத் தேடிப் பொருத்தி சற்று உதவினேன் அவ்வளவுதான். இதில் என்ன தவறு இருக்கிறது. ஊடகங்கள்தான் இச்சம்பவத்தை பெரிது படுத்துகிறார்கள்.''
இவ்வாறு எம்எல்ஏ ரஜ்னீஷ் சிங் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago