குருஷேத்ரா: ஹரியானாவில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், குருஷேத்ராவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு பாஜக எம்.பி. நவீன் ஜிண்டால் குதிரையில் வந்து வாக்களித்தார்.
ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது. இதற்காக 20,632 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. குருஷேத்ராவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு பாஜக எம்.பி, நவீன் ஜிண்டால் நேற்று குதிரையில் வந்து வாக்களித்தார். பாஜக.வில் சேருவதற்கு முன் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.
பாஜக.வில் சேர்ந்த பின் இவர் அளித்த பேட்டியில், “பாஜக.வில் சேர்ந்ததில் பெருமிதம் கொள்கிறேன். பிரதமர் மோடி தலைமையின் கீழ் நான் நாட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். வளர்ந்த பாரதம் என்ற பிரதமர் மோடியின் கனவுக்குஎனது பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன்” என கூறினார்.
கடந்த 2019-ம் ஆண்டு ஹரியானாவில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 40 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 31 இடங்களை கைப்பற்றியது. 10 இடங்களில் வெற்றி பெற்ற ஜேஜேபி கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்தது. பின் அந்த கட்சி கூட்டணியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago