மும்பை: மகாராஷ்டிராவில் தாங்கர் சமூகத்தினருக்கு நாடோடி பழங்குடியினர் (என்.டி) என்ற பிரிவின் கீழ் 3.5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் 7% இடஒதுக்கீடு கொண்ட எஸ்டி பிரிவில் தங்களை சேர்க்க வேண்டும் என்று தாங்கர் சமூகத்தினர் கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தாங்கர் சமூகத்தை சேர்ந்த 6 பேர் பந்தர்பூரில் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
தாங்கர் சமூகத்தினரின் இந்த கோரிக்கைக்கு துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் தலைமையிலான மகாராஷ்டிர எஸ்டி எம்எல்ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நர்ஹரி ஜிர்வால் உள்ளிட்ட எஸ்டி எம்எல்ஏ.க்கள் மாநில தலைமைச் செயலகமான மந்திரலயாவின் 3-வது மாடியில் இருந்து 2 மாடியில் கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு வலையில் குதித்து நேற்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்த அவர்கள், தங்களின் நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஷிண்டேவை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago