புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘எக்ஸ்' தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், இஸ்ரேலுக்கு சுமார் 15,000 இந்திய தொழிலாளர்களை அனுப்புவதற்கான ஆட்சேர்ப்பு பணியில் பிரதமர் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்கு முன், இந்திய இளைஞர்கள் பலர் போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்யா-உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் பலர் தங்கள் உயிரையும் இழந்தனர். இளைஞர்களுக்கு எதிரான மோடி அரசின் கொள்கைகள் காரணமாக ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பின்மையை இது காட்டுகிறது.
போர் நடைபெறும் பகுதியில் இந்திய இளைஞர்கள் வேலைக்குச் செல்லத் துணிவது, வேலைவாய்ப்புகள் குறித்து பிரதமர் மோடி அளிக்கும் தகவல்கள் போலியானவை என்பதை காட்டுகிறது. மேலும் தனது அரசின் தோல்விகளை மறைக்க அவர் இவ்வாறு கூறுவதை காட்டுகிறது. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago