ஹைதராபாத்: திரை நட்சத்திரங்களான சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்துக்கு அரசியல் தலையீடு தான் காரணம் என தெலங்கானா மாநில அமைச்சர் கொண்டா சுரேகா சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்வினைகள் எழுந்த நிலையில் அமைச்சர் தனது கருத்தை திரும்பப் பெற்றுள்ளார்.
கடந்த 2017 அக்டோபரில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் திருமண வாழ்க்கையில் இணைந்தனர். இந்நிலையில், கடந்த 2021 அக்டோபரில் இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவு செய்திருப்பதாக அறிவித்தனர். அதன் பின்னர் இருவரும் அவர்களது பணிகளை கவனித்து வருகின்றனர். நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இந்நிலையில், தெலங்கானா சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரான கொண்டா சுரேகா, சமந்தா - நாகசைதன்யா குறித்து தெரிவித்த கருத்துகள் கடும் சலசலப்பை ஏற்படுத்தின. இருவரது பிரிவுக்கும் தெலங்கானா முன்னாள் அமைச்சரும், சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமாராவ்தான் காரணம் என்று கொண்டா சுரேகா தெரிவித்திருந்தார்.
இதற்கு நடிகர்கள் நாகர்ஜுனா, நாக சைதன்யா, சமந்தா மற்றும் நானி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ், அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனிப்பட்ட நபர்களின் குடும்ப வாழ்க்கையில் அரசியல் செய்ய வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த சூழலில் அமைச்சர் கொண்டா சுரேகா தனது கருத்தை திரும்பப் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்தது, “என்னுடைய அரசியல் பயணத்தில் அரசியல் ஆதாயத்துக்காக யாருடைய குடும்பப் பிரச்சினை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியது இல்லை. நான் சமந்தா மற்றும் அவரது குடும்பத்தை இழிவுப்படுத்தவில்லை. நான் எப்போதும் அடிப்படையை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதில்லை. எனது பேச்சும், கருத்தும் உங்களை புண்படுத்தி இருந்தால், அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களை இழிவுப்படுத்தும் அரசியல் தலைவாரி நோக்கி தான் நான் கேள்விகளை எழுப்பி இருந்தேன். சமந்தாவின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அதனை செய்யவில்லை. நீங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம் குறித்து நான் அறிவேன்” என கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
53 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago