பெங்களூரு: ஜன அதிகார சங்கரஷ சங்கத்தின் துணை தலைவர் ஆதர்ஷ் அய்யர் தாக்கல் செய்த மனுவின்பேரில், பெங்களூருவில் மக்கள் பிரதி நிதிகள் மீதான வழக்கை விசாரிக் கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 28- தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து திலக் நகர் போலீஸார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை நேற்று விசா ரித்த நீதிமன்றம், ”நிர்மலா சீதாராமன் யாரையும் நேரடியாக மிரட்டி பணம் பறித்ததற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்பு களை அவர் நேரடியாக தேர்தல் பத்திரங்களை வாங்குவதற்கு பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இதனை கருத்தில் கொள்ளாமல் வழக்குப்பதிவு செய்ய உத்தர விட்டுள்ளது. எனவே அந்த வழக் கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்வழக் கின் அடுத்தக்கட்ட விசாரணை அக்டோபர் 22-ம் தேதி நடை பெறும்" எனக் கூறி, வழக்கை ஒத்திவைத்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நிர்மலா சீதாராமனுக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago