முஸ்லிம்கள் அதிகரித்து விட்டதால் உ.பி.யில் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்: சமாஜ்வாதி எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை

By செய்திப்பிரிவு

லக்னோ: உ.பி.யின் அம்ரோகா தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ மெகபூப்அலி. முன்னாள் அமைச்சரான இவர், பிஜ்னோரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, “உ.பி.யில் பாஜக ஆட்சிமுடிவுக்கு வரும். மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதனால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். மக்கள் விழித்துக்கொண்டு விட்டனர் என்பதை நாட்டை எரித்து வருவோர் உணர வேண்டும். மக்களவைத் தேர்தலில் மக்கள்தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 2027 சட்டப்பேரவை தேர்தலில் உங்கள் ஆட்சி முடிவுக்கு வரும். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்" என்றார். மெகபூப் அலியின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உ.பி. பாஜக பொதுச்செயலாளர் சுப்ரத் பதக் கூறுகையில், “எம்எல்ஏவின் இந்தக் கருத்து சமாஜ்வாதி கட்சிபதிலளிக்க வேண்டிய பல கேள்விகளை எழுப்புகிறது. இதற்காகத்தான் அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி தலைவர்) இந்துக்களை பிளவுபடுத்துவதில் மும்முரமாக இருக்கிறாரா? இதனால் குறிப்பிட்ட சமூகத்தின் விருப்பம் நிறைவேறுமா? நாடு மாறிவிட்டது என்பதை அகிலேஷ் நினைவில் கொள்ள வேண்டும். இந்துக்கள் மோடியை 3-வது முறையாக பிரதமராகவும், யோகி ஆதித்யநாத்தை 2-வது முறையாக முதல்வராகவும் ஆக்கியுள்ளனர்" என்றார். மெகபூப் அலியின் கருத்தை சமாஜ்வாதி ஏற்கவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுனில் சஜன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்