புதுடெல்லி: இந்தியத் தொழிலாளர்களில் பெண்களின் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது என மத்திய தொழிலாளர் நல அமைச்சர் மன்சுக் மாண்டவியா பெருமிதம் தெரிவித்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கூறியதாவது:
இந்தியாவின் தொழிலாளர் சக்தி யாரும் எதிர்பார்க்காத வகையில் மாற்றம் அடைந்துள்ளது. பெண்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தடைகளை உடைத்து, அதிக பொறுப்புகளை ஏற்று முன்னிலை வகிக்கின்றனர். இந்தியத் தொழிலாளர்களில் பெண்களின் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. சில துறைகளில் அவர்கள் ஆண்களை விட அதிக நேரம் பணியாற்றுகின்றனர். இந்த மாற்றம் இந்தியாவின் தொழிலாளர் சக்தியில் ஏற்பட்டுள்ள மவுனப் புரட்சி ஆகும்.
பிரதமர் முத்ரா யோஜனா, ஸ்டாண்ட்-அப் இந்தியா, ஸ்கில் இந்தியா ஆகியவை பெயரளவு கொள்கைகள் அல்ல, அவை அடிப்படை கொள்கை மாற்றமாகும். இவற்றின் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்கள் உந்து சக்தியாக திகழ்வதை நாம் பார்க்கிறோம். இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago