பசுக்களுக்கு சேவை செய்ததால் கொலை மிரட்டல்: பிரதமரிடம் பாதுகாப்பு கேட்கும் முஸ்லிம் பெண்

By ஏஎன்ஐ

மத்திய பிரதேசத்தில் சொந்தமாக மாடுகளுக்கான ஒரு சேவை நிறுவனத்தை நடத்திவரும் மெஹ்ருன்னிஸா என்ற முஸ்லிம் பெண்மணி, தனக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டுமென பிரதமர் மற்றும் முதல்வர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் ராஷ்டிரிய கவ் ரக்ஷா வாஹினி அமைப்பின் தலைவர் மெஹ்ருணிஸா கான், இதுகுறித்து ஏஎன்ஐயிடம் பேசுகையில், ‘‘பசு பாதுகாப்புக்கு இணைந்து செயல்பட்டு வருவதாலும் முத்தலாக் நடைமுறையை எதிர்த்து கருத்துத் தெரிவித்து வந்ததாலும் எனது மாமியாரால் துன்புறுத்தப்பட்டு, மோசமாக நடத்தப்பட்டேன்.

இதுகுறித்து மூன்று மாதங்களுக்கு முன் நான் புகார் அளித்தும் அவர்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்கவில்லை. நான் இதற்காக முதல்வர் பிரிதிவிராஜ் சவுகான், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் உதவியை நாடியுள்ளேன்.

பசு பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கிய நாள் முதல் எனக்கு எதிர்ப்புகள் கிளம்பிவருகின்றன என்பதைப் பற்றி எனது பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளேன்.

இதில் ஒரு முக்கியமான பிரச்சனை என்னவென்றால் பசு பாதுகாப்பு மற்றும் முத்தலாக் எதிர்ப்பு போன்றவற்றில் நான் இணைந்து செயல்படத் தொடங்கிய நாள்முதல் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் அந்த கொலை மிரட்டல்கள் எதுவும் வெளியிலிருந்து வரவில்லை.

எனது சொந்தக் குடும்பத்திலிருந்தே நான் அதை எதிர்கொண்டுவருகிறேன். அவர்களிடமிருந்து விலகிச் சென்றபோதும், என்னால் அவர்களுக்கு கெட்டப் பெயர் ஏற்படுவதாகக் கூறி இந்த வகையான இயங்கங்களில் செயல்படுவதிலிருந்து விலகுமாறு அவர்கள் கூறி வருகிறார்கள். நான் விலங்குகளுக்காக வேலை செய்யவில்லை. அவர்களுக்கு இருக்கும் பெருமைகளை நான் அழிக்கிறேன் என்று யாரும் சொல்ல முடியாது’’ என மெஹ்ருன்னிஸா தெரிவித்தார்.

அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் நீமுச் மாவட்டத்தில் வீட்டிலிருந்து 500 கி.மீ.தொலைவில் பசுக்களுக்கான பாதுகாப்பு இல்லத்தை அவர் தொடர்ந்து நடத்தி வருகிறார். கொலைமிரட்டல்கள் வந்தபோதிலும் பசு பாதுகாப்பு இல்லங்களிலிருந்து தான் செய்துவரும் சேவைகளை நிறுத்தப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்