பாஜகவை ஆதரிக்க ஆம் ஆத்மி கட்சி மட்டுமல்ல, டெல்லி மக்கள் கூடத் தயாராக இருக்கிறார்கள், 2019-ம் தேர்தில் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் கூடச் செய்கிறோம். ஆனால், என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.
டெல்லி தலைநகராக இருப்பதால் பாதுகாப்பு கருதி இன்னும் யூனியன் பிரதேசமாக வைத்து மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இதனால், டெல்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆம் ஆத்மி அரசு அமைந்தும் அதனால், சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. போலீஸ் பொறுப்புகூட மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. டெல்லியில் மத்திய அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநருக்குத்தான் அதிகமான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், டெல்லிக்கு மாநில அந்தஸ்து தரக்கோரி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து முழக்கமிட்டு வருகிறார். இந்நிலையில், டெல்லியில் தனது வீட்டில் நேற்று முதல்வர் கேஜ்ரிவால், கட்சியின் முக்கியத் தலைவர்கள், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மகாத்மா காந்தி வெள்ளேயனே வெளியேறு இயக்கத்தை நடத்தியதைப் போன்று, ஆம் ஆத்மி கட்சி, துணை நிலை ஆளுநர் வெளியேற வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆம் ஆத்மி அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் துணை நிலை ஆளுநர் முடக்கி வருகிறார். குறிப்பாக கண்காணிப்பு கேமரா திட்டம், வீட்டுக்கே வந்து இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை நிறுத்திவிட்டார் எனப் பேசினார்.
இந்நிலையில், டெல்லியில் சட்டப்பேரவையில் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு அனைத்து ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்து, தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
அப்போது தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியதாவது:
''டெல்லிக்கு தற்போது இருக்கும் யூனியன் பிரதேச அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு, மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, மத்தியில் ஆளும பாஜக அரசு, டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கினால், பாஜகவை ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆதரிக்கும்.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்யும். ஆம் ஆத்மி கட்சி மட்டுமல்ல, டெல்லி மக்களும் ஆதரிப்பார்கள். டெல்லியில் உள்ள ஒவ்வொரு வாக்குகளையும் பாஜகவுக்கு ஆதரவாக மாற்றுவோம். அவ்வாறு செய்யாவிட்டால், டெல்லியில் வசிக்கும் மக்கள் டெல்லியில் இருந்து பாஜக செல்ல வேண்டும் என்று வாசகத்தை வைத்து எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்''.
இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago