ஓராண்டில் 60 மருத்துவ கல்லூரிகள் திறப்பு: மத்திய அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் 60 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாகஆட்சியமைத்து 100 நாட்களைக் கடந்துள்ளது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முதல் 100 நாள் சாதனைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா பட்டியலிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் மட்டும் 60 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைத்துள்ளோம். இதன்மூலம் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் 6.30 சதவீதம் அதிகரித்துள்ளன. 2023-24-ம் ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் 1,08,940-ஆக இருந்தன. இது 2024-25-ம் ஆண்டில்1,15,812-ஆக அதிகரித்து உள்ளது.

மொத்தம் 766 கல்லூரிகள்: 2023-24-ம் ஆண்டில் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 706-ஆக இருந்தது. 2024-25-ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 766-ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2013-14-ம் ஆண்டில் 387-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 379 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப் பட்டுள்ளன. தற்போது நாட்டில் 423 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 343 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.

இதேபோல் மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2023-24-ம் ஆண்டில் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் 69,024-ஆக இருந்தன. இது 2024-25-ம் ஆண்டில் 73,111-ஆக அதிகரித்துள்ளது.

மேற்படிப்பு இடங்கள் உயர்வு: கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவ மேற்படிப்பு இடங் களின் எண்ணிக்கை 39,460 என்ற எண்ணிக்கையில் இருந்து 73,111-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் தர்பாங்கா நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால்நீண்ட நாட்களாக அங்கு இடத்தை ஒதுக்கீடு செய்வதில் பிரச்சினை இருந்தது. இந்நிலையில் பிஹார் அரசு 150.13 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தை கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி ஒதுக்கி மத்திய அரசிடம் தந்துள்ளது. விரைவில் அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்