திருப்பதி லட்டு விவகாரம்: அரசிடம் இருந்து கோயில்கள் விடுவிக்கப்பட பாஜக, இந்துத்துவா அமைப்புகள் வலியுறுத்தல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: திருப்பதி வெங்கடாஜலபதி கோயி லின் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண், சனாதன தர்மம் பாதுகாப்பு வாரியம் அமைக்கும் நேரம் வந்துள்ளதாகக் கூறிய கருத்தால், அரசு நிர்வாகங்களுக்கு நெருக்கடி கிளம்பியுள்ளது. இதையடுத்து இந்துத்துவா அமைப்புகள் அரசிடமிருந்து கோயில்களை மீட்கும் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளன.

இது குறித்து விஷ்வ இந்து பரிஷத்தின் பொதுச்செயலாளரான பஜ்ரங் பக்தா வெளியிட்ட வீடியோ வில் கூறியதாவது: கோயில்கள் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்படுவதுதான் திருப்பதி லட்டு விவகாரத்துக்கு காரணம். எனவே, ஆந்திரப்பிரதேச அரசு உடனடியாக வெங்கடாஜலபதி கோயில் நிர்வாகத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதுபோல், நாட்டின் அனைத்து கோயில்களும், மடங்கள் மற்றும் புனிதத்தலங்களும் அரசின் நிர்வாகத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். திருப்பதி விவகாரத்தில் தவறு செய்தவர்களை கண்டுபிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

இந்த பிரச்சினையால் நாங்கள் நீண்டநாளாக வலியுறுத்தும், அரசுகளிடமிருந்து கோயில்கள் மீட்புஎன்ற கோரிக்கை வலுவடைந்துள் ளது. கோயில்களின் நிர்வாகத்தை வைத்து ஆட்சி செய்யும் அரசுகள் அரசியல் செய்கின்றன. அரசால் அமர்த்தப்படும் இந்து அல்லாத நிர்வாகிகளால் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆந்திர அரசு, மத்திய அரசிடம் கலந்துபேசி முடிவு எடுக்கும் என நம்புகிறோம். இவ்வாறு பஜ்ரங் பக்தா கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைஸர் ஆங்கில இதழிலும் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசாங்கங்களால் கோயில்கள் நிர்வாகிக்கப்படுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகவும், பல நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரான செயல் என்றும்குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக தமிழ்நாட்டின் கோயில்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

இது குறித்து ஆர்கனைசர் இதழின் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது: கோயில்களின் நிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இங்குள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான 400 கோயில்கள் சனாதனத்தின் சின்னங்களாக அமைந்துள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மற்றும் நகைகள் பிரம்மாண்டமான அளவில் கடந்த 70 வருடங்களாக ஊழலில்சிக்கியுள்ளன. சுமார் 50,000 ஏக்கர்கோயில் நிலங்கள் அரசு நிர்வாகத்தில் காணாமல் போயுள்ளன.

பல கோயில்களுக்கு சட்டப்படியான எந்த அரசு உத்தரவும் இன்றி, தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. உதாரணமாக, ராமநாதபுரத்தின் ராமநாதசுவாமி கோயில், சென்னை மயிலாப்பூரின் கபாலீஸ்வரர் கோயில், திருச்சியின் தாயுமானசுவாமி கோயில் ஆகியவற்றை அரசுநிர்வகிக்க இடப்பட்ட உத்தரவுகள் இல்லை. இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே சொத்துக்கள் நிறைந்த அதிகமான கோயில்கள் தென் மாநிலங்களில் உள்ளன. இவற்றில் தமிழக அரசு மட்டுமேகோயில்களையும் அதன் சொத்துகளையும் நேரடியாக தனது நிர்வாகத்தில் வைத்துள்ளது. இதர மாநிலங்களில் இக்கோயில்கள் அறக்கட்டளை அல்லது கோயில் அமைப்புகளை அமைத்து அவற்றின் மூலமாக அரசுகள் நிர்வகிக்கின்றன. இது தொடர்பாக பிரதமர் மோடியும் தமிழ்நாடு அரசு மீது நேரடியாகப் புகார் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE