உச்ச நீதிமன்ற யூடியூப் சேனல் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். அதில் கிரிப்டோ கரன்சியை புரொமோட் செய்யும் வகையிலான வீடியோ இடம்பெற்றுள்ளன.

உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வில் விசாரணைக்கு வரும் வழக்குகள் மற்றும் பொது நலன் சார்ந்த வழக்கு விசாரணைகளை உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனலில் ஸ்ட்ரீம் செய்வது வழக்கம்.

அண்மையில் கூட கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு விசாரணை நேரலையில் இதில் ஸ்ட்ரீம் ஆனது. இந்தச் சூழலில் தான் ஹேக்கர்கள் அதை ஹேக் செய்துள்ளனர்.

தற்போது ஹேக் செய்யப்பட்ட இந்தப் பக்கத்தில் அமெரிக்காவின் ரிப்பில் லேப்ஸின் எக்ஸ்ஆர்பி கிரிப்டோகரன்சியின் புரொமோஷன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த யூடியூப் சேனல்களை ஹேக்கர்கள் முடக்கி, அதில் தங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி முறைகேடு மேற்கொள்வது தொடர்பாக ரிப்பில் லேப்ஸ் நிறுவனம் யூடியூப் தரப்புக்கு புகார் அளித்துள்ளது.

இந்தச் சூழலில் ஹேக் செய்யப்பட்ட யூடியூப் பக்கத்தை மீட்கும் பணியில் உச்ச நீதிமன்ற தொழில்நுட்பப் பிரிவு மும்முரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE