சனாதன தர்மம் இருப்பதால் நெருக்கடியால் இந்தியாவை அழிக்க முடியாது: மோகன் பாகவத் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சனாதன தர்மம் இருப்பதால் நெரு க்கடிகளால் இந்திய தேசத்தை அழிக்க முடியாது என ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பால்நாத் ஆசிரமத்துக்கு நேற்று முன்தினம் சென்ற அவர் அங்கு நடத்தப்பட்ட மகாமிருத்யுஞ்சய் மகாயாகத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: நெருக்கடிகளுக்கு இந்தியாவை அழிக்கும் சக்தி இல்லை. ஏனெனில் இந்தியா சனாதன தர்மத்துடன் உள்ளது. இந்தியா வெறும் நிலம் அல்ல. சமூகத்தில் பின்தங்கிய நிலையில் ஏழைகளாக இருக்கும் நமது சகோதரர்களை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். நம்மிடம் இருப்பதை கொடுத்து அவர்களை உயர்த்த வேண்டும்.

நம்மிடையே உள்ள தீண்டாமையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியது மிகவும் முக்கியம். சமூகத்தின் மனநிலையை மாற்றுவதன் மூலமே இந்த மாற்றம் சாத்தியமாகும். அத்துடன், சமூகநல்லிணக்கம் இந்த மாற்றத்துக்கு முக்கிய உந்துதலாக அமையும். அதன் ஒரு படியாகத்தான். எந்த வகையான பாகுபாடு மற்றும் தீண்டாமையை தாண்டி முழு இந்து சமூகமும் இந்த யாகத்தில் பங்கேற்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE